பிக் பாஸ் சீசன் 6 சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக துவங்கப்பட்டது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் வித்யாசமான போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக வலம் வருவது ஜி.பி.முத்து தான்.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இவர் ரஜினியின் பாடலை பீல் பண்ணி பாடியது செம வைரலாகி வருகின்றது. நீச்சல் குளம் அருகே படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்த ஜிபி முத்து திடீரென எழுந்து ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்டேன் கண்மணி.. என் கண்மணி என கைகளை அசைத்து பாடியதை அமுதவாணனும் சாந்தியும் ரசித்துப் பார்த்தனர்.

தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நாளுக்கு நாள் ஜி.பி முத்துவிற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது