Skygain News

வெடித்த சண்டை..வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஜி.பி.முத்து..நேற்றைய எபிசொட் ஹைலைட்ஸ்..!

அண்மையில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மைனா நந்தினி வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அசல் மற்றும் தனலட்சுமி இடையே நடந்த சண்டை,ஜி.பி.முத்து அழுதது தான் ஹைலைட்டாக இருந்தது.முதலில் கடந்த சில நாட்களாகவே டல்லாக இருந்த ஜிபி முத்து, தற்போது தன்னால் முடியவில்லை என்றும், ஒரு மாதிரியாக இருப்பதாகவும் கேமரா முன் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தன்னுடைய தம்பிகள் ஆனந்த், மணியிடம் பேச வேண்டுமென கூறியுள்ளார்.இந்நிலையில் ஜிபி முத்துவை Confession Room-க்கு பிக்பாஸ் அழைத்து பேசிய பிக்பாஸ், “வீட்டில் இருந்து செய்தி கேட்டிட்டு தான் கூப்பிட்டேன். விஷ்ணு நல்லா இருக்கறதா தெரியப்படுத்தி இருக்காங்க. விஷ்ணு உட்பட வீட்ல இருக்குற எல்லாருமே அப்பாவ எப்படியாச்சும் 100 நாள் வீட்டுல வச்சுக்கங்கன்னு சொல்லி இருக்காங்க” என கூறினார்.

இதற்கு பதிலளித்த ஜிபி முத்து, “ஆனா எனக்கு இருக்க முடியல. ஒரு மாதிரி மூச்சு முட்டுது எனக்கு” என்றார். பின்னர் பேசும் பிக்பாஸ், “இத்தனை நாட்கள் நீங்கள் நன்றாக விளையாடி கொண்டிருக்கிறீர்கள். முதல் தலைவர் என்ற பதவியையும் 2 மணி நேரம் கஷ்டப்பட்டு ஜெயிச்சு வாங்கி இருக்கீங்க. இந்த முத்து தான் எனக்கு தெரிஞ்ச முத்து. வெளிய இருக்குறவங்க உங்கள பாத்து பல விஷயங்களை கத்துக்குறாங்க என அறிவுரை வழங்கியுள்ளார்.

இதையடுத்து அசல் நேற்று இரவு தனலட்சுமியை ஆண்டி என கூறி சீண்டினார். இது தனலட்சுமியை எரிச்சலடைய செய்தது. எனவே இனி இவ்வாறு ஆண்டி என கூறாதே என அசலிடம் சண்டைக்கு சென்றார் தனலட்சுமி.

மேலும் அசல் தனலட்சுமியிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்ய சண்டை பெரிதானது. எனவே மற்ற போட்டியாளர்கள் இருவரையும் பிரித்து சண்டையை தடுத்தனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More