Skygain News

பிக் பாஸ் வீட்டில் முறைகேடு செய்த போட்டியாளர்..வெளியேற்றப்படும் வாய்ப்பு..!

பிக் பாஸ் ஆறாவது சீசன் கடந்த மாதம் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு, மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதல் வாரத்தில் இருந்து தற்போது வரை, சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல்… மிகவும் பரபரப்பாக நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் நிலையில், 4 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரமும் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருந்த போது தற்போது ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. என்னவென்றால் இந்த சீசனில் முக்கியமான போட்டியாளராக கருதப்படும் மணிகண்டன் ப்ளூ டூத் பொருந்திய ஷூவை பிக் பாஸ் வீட்டில் பயன்படுத்து வருவதாக தகவல் வந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு வெளியுலகம் தொடர்புடைய பொருட்களை பயன்படுத்தக்கூடாது என ஒரு விதி இருக்கின்றது. ஆனால் மணிகண்டன் இவ்வாறு விதியை மீறியுள்ளதால் அவர் வெளியேற்ற படுவாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.