அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் திரைப்படம் தான் துணிவு. நேர்கொண்டப்பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திக்கனி, ஜான் கோக்கென் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, ஹைத்ராபாத் மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது பாங்காக்கில் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன.இதற்காக அஜித் மற்றும் மஞ்சு வாரியர் உட்பட படக்குழுவினர் பாங்காக் புறப்பட்டனர், அவர்களின் விமான நிலைய வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.
நாட்டை உலுக்கிய வங்கிக்கொள்ளை சம்பவத்தை மைய்யப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பாவனி மற்றும் அமீர். காதல் ஜோடிகளாக தற்போது சுற்றி வரும் இவர்களுக்கு அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
BUZZ :
— AJITH FANS COMMUNITY™ (@TFC_mass) October 2, 2022
Amir, Pavni, Ciby Are OnBoard For #Thunivu #AjithKumar #NoGutsNoGlory pic.twitter.com/px3vDKLzwu
ஆம், அதன்படி தற்போது பாவனி, அமீர் மற்றும் சிபி சக்ரவர்த்தி மூவரும் விமானத்தில் துணிவு திரைப்பட ஷூட்டிங்கிற்காக செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது