பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் நடிகை குயின்ஸி ஸ்டான்லி.சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த குயின்ஸி ஸ்டான்லி, அன்பே வா, கருப்பு கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார் குயின்ஸி ஸ்டான்லி.
இதில் பெரிதாக பெயரை டேமேஜ் செய்து கொள்ளாமல் இருந்தார் குயின்ஸி. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்ததால் அவரை மிக்சர் சாப்பிடுகிறார் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.இந்நிலையில் நடிகை குயின்ஸி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கையோடு பிரபலம் ஒருவரை சந்தித்துள்ளார்.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முந்தைய வாரம் வெளியேறிய ராபர்ட் மாஸ்டரை சந்தித்துள்ளார் குயின்ஸி ஸ்டான்லி. ராபர்ட் மாஸ்டர் குயின்ஸியை தனது மகள் ஸ்தானத்தில் வைத்திருப்பதாக கூறி வந்தார். இருவருக்கும் இடையே ஒரு நல்ல பாண்ட் இருந்து வந்தது.
Pappaa Blessed ☺️✌🏻#RobertMaster #queency #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBoss pic.twitter.com/a7fMa6wkWZ
— Queency Standly (@Queency_love1) December 7, 2022
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த குயின்ஸி ராபர்ட் மாஸ்டரை சந்தித்துள்ளார். ராபர்ட் மாஸ்டருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள குயின்ஸி, பப்பா என அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்