பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி எதிர்பார்ததஹி விட சுவாரஸ்யமாக செல்கின்றது.இதுவரை சண்டைக்கும் ,சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் இந்நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது.இந்நிலையில் இன்று வெளியான புதிய ப்ரோமோவில் கமல் போட்டியாளர்களை பார்த்து சற்று காட்டமாக பேசியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் மைக்கை மறைத்துக்கொண்டு பேசுவது, சைகை காட்டி பேசுவது, வேறு மொழிகளில் பேசுவது என தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனை ஏற்கனவே பலமுறை கண்டித்தார் கமல்ஹாசன்.
கடந்த வாரம் கூட ஆயிஷாவும், ஷெரினாவும் மலையாளத்தில் பேசியதை சுட்டிக்காட்டி வார்னிங் கொடுத்தார். இருப்பினும் ஹவுஸ்மேட்ஸ் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வாரம் கூர அமுதவாணனும், ஜனனியும் கண்ஜாடையில் பேசிக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
#Day28 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/QXWLzpngbP
— Vijay Television (@vijaytelevision) November 6, 2022
இதனால் கோபமடைந்துள்ள கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸை திட்டித்தீர்க்கும் புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.