பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்று வரும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஏலியன்களாகவும், ஆதிவாசியாகவும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
ஏலியன் அணியினர் கொடுக்கும் டார்ச்சர்களை பொறுத்துக்கொண்டு ஆதிவாசி அணியினர் கோபப்படாமல் இருந்தால் அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு பூ கொடுக்கப்படும், அதேபோல் ஆதிவாசி அணியினர் செய்யும் டார்ச்சர்களை பொறுத்துக்கொண்டு ஏலியன் அணியினர் வெற்றிபெற்றால் அவர்களுக்கு கல் கொடுக்கப்படும்.
இந்த டாஸ்கில் அமுதவாணனும் அசீமும் சண்டையிட்டதுதான் தற்போது ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.ஏன் இவ்வளவு அசிங்கமா, சீப்பா கேம் ஆடுறீங்கனு அமுதவாணனை பார்த்து கேட்டார் அசீம். உடனே அமுதுக்கு கோபம் வந்துவிட்டது. அவங்க கேவலமானவங்க, நம்ம கேவலமானவங்க இல்ல என்றார் அசீம். யாராவது இப்படி பேசுவாங்களா, சீப்பு, கேவலமானவங்கனு, கேம் இது என்றார் அமுதவாணன்.
#Day52 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/sibxyfbuow
— Vijay Television (@vijaytelevision) November 30, 2022
இதையடுத்து அசீமும், அமுதவாணனும் மாறி மாறி கத்த, இடையே புகுந்த விக்ரமனோ, நீங்க ரவுடித்தனம் பண்றீங்கனு அசீமை பார்த்து சவுண்டுவிட்டார்.தற்போது இந்த ப்ரோமோ செம வைரலாகி வருகின்றது