பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. 35 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதிலும் இன்று விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட உள்ளதால், 16 போட்டியாளர்களே எஞ்சி இருப்பர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடையிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக சிலர் வீட்டுக்கும் அனுப்பப்படுவர்.இந்நிலையில் அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் விரைவில் வைல்டு கார்டு எண்ட்ரி இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த சீசனில் முதலாவது வைல்டு கார்டு போட்டியாளராக பிரபல விஜே பார்வதி எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரையைச் சேர்ந்த பார்வதி, கடந்த ஆண்டு நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.