இந்த பிக் பாஸ் சீசனில் சிறப்பாக விளையாடும் போட்டியாளர்களின் முதன்மையில் இருக்கின்றார் ஷிவின்.திருநங்கை போட்டியாளரான ஷிவின் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் தன்னுடன் சக போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கதிரவன் மீது தனக்கு உள்ள கிரஷ்ஷை அவரிடமே வெளிப்படுத்தி உள்ளார் ஷிவின்.
இரவில் ஒரு மணிநேரமாக கதிரவனுடன் அமர்ந்து பேசிய ஷிவின், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என பலமுறை தனது காதலை சூசகமாக சொல்லியும், தனக்கு அது புரியல என மிக்சர் போல் கதிரவன் அளித்துள்ள பதிலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது பெற்றோர் சொன்ன ஒரே காரணத்திற்காக காதலை முறித்துக் கொண்டதாக ஷிவின் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது