கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி தமிழுக்கு செட் ஆகுமா என ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஆனால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் இந்நிகழ்ச்சியை அடுத்தகட்டத்துக்கு அழைத்து சென்றார்.
சர்ச்சைகளுக்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது.இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கும்.
தற்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் விவரம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதன்படி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள 10 பெண் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகளவில் இந்த ஷோவில் கலந்துகொள்ள உள்ளார். அதன்படி விஜய் டிவியின் பேமஸ் தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம்.
இதைத்தொடர்ந்து அர்ச்சனா, ரோஷினி, ஸ்ரீநிதி, தர்ஷ குப்தா, மனிஷா யாதவ், மோனிகா என பலர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது
வேட்டைக்கு ரெடியா.. 😎 #BiggBossTamil6 விரைவில்.. @ikamalhaasan @preethiIndia @NipponIndia pic.twitter.com/3pme4NwfSQ
— Vijay Television (@vijaytelevision) September 5, 2022