விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். டிக்டாக், யூடிப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலமான ஜிபி முத்துவும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
முதல் நாளே தன் ஸ்டைலில் பேசி உலகநாயகன் கமலையே அசரவைத்தார் ஜி.பி.முத்து. இந்நிலையில் நேற்று இவர் அழுததை பார்த்த இவரது ஆர்மியை சேர்ந்த ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் யார் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
ஏற்கனவே அடுத்த வாரத்திற்கான நேரடியான நாமினேஷனில், ஆயீஷா, விக்ரமன், அசீம், உள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் நபராக தனலட்சுமி வெளியேறுவார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

ஏனென்றால் நேற்று ஜி.பி. முத்துவை பார்த்தாலே காண்டாகுது என தனலட்சுமி கூறியுள்ளார். இதை பார்த்த ஜிபி முத்து ரசிகர்கள் பலரும் அடுத்த வார எலிமிசேஷனின் தனலட்சுமி சிக்கினால் கண்டிப்பாக அவர் தான் முதல் நபராக வீட்டில் இருந்து வெளியேறுவார் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் ஜி.பி முத்துவுடன் மோதியதில் இருந்து தனலட்சுமிக்கு எதிர்ப்பு கிளம்பிவருவ்து குறிப்பிடத்தக்கது