தமிழில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகிறது.21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி சிலரின் வெளியேற்றத்துடன் ஓடுகிறது. இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். இந்த வாரம் கமல்ஹாசன் அவர்கள் இடம்பெறும் வாரம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது என்பது தெரிகிறது.
இந்நிலையில் இந்த வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்திருக்கும் நபர் யார் என்று போட்டியாளர்களிடம் பிக் பாஸ் கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் கேட்ட உடனேயே ஏ.டி.கே. பெயரை தெரிவித்துள்ளார் ஜனனி.
அதை கேட்ட ஏ.டி.கே.வோ உங்களிடம் பேச ஒன்னுமே இல்லை என்று கடுப்பாக கூறியிருக்கிறார்.மேலும் உங்கள் மீது எனக்கு தனி அக்கறை இருந்தது, அதை கொச்சைப்படுத்திவிட்டீர்கள், இந்த வீட்டில் யார் மீதும் இல்லாத பாசம் உங்கள் மீது இருந்தது என கத்தி கோபப்படுகிறார் ADK
#Day32 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/MhG6BAzgft
— Vijay Television (@vijaytelevision) November 10, 2022