பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில், இந்த வாரம் பேக்கரி டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.இதில் தினசரி இருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது. முதல் நாளில் அசீம் மற்றும் மகேஸ்வரி இடையே சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து இரண்டாம் நாளில் தனலட்சுமியும், மணிகண்டனும் முட்டிக்கொண்டனர். இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று அமுதவாணனுக்கும் விக்ரமனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
டாஸ்க்கின் போது தன்னை பர்சனல் அட்டாக் செய்தவாக கூறி அமுதவாணனை எச்சரிக்கும் விக்ரமன், அவரை வாயை மூடிட்டு போ என்று கோபத்துடன் கூறுகிறார். பின்னர் இந்த சண்டைக்கு இடையே வரும் தனலட்சுமி, நீங்க பேசுறது மட்டும் தான் நியாயம்னு பேசாதீங்க என சொன்னதும் சண்டை மேலும் சூடுபிடிக்கிறது. இதுகுறித்த காட்சிகள் தான் தற்போது புரோமோவில் இடம்பெற்று உள்ளது.
#Day32 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/GIbwKfyEWz
— Vijay Television (@vijaytelevision) November 10, 2022