பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாக செல்கின்றது.அடர்க்கு மிக முக்கிய காரணமாக அசீம் இருந்து வருகின்றார்.பிக் பாஸ் வீட்டின் சண்டைக்கோழியாக வலம் வரும் அசீம் தற்போது மகேஸ்வரியிடம் சண்டையிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து ‘அந்த டிவி’ ‘இந்த டிவி’ என டாஸ்க் விளையாடி வருகின்றனர். இதில் நேற்று நடன நிகழ்ச்சி, டிராமா என கலைகட்டி இருந்த பிக்பாஸ் வீட்டில் இன்று மகேஸ்வரி – அசீமுக்கு இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதில் அசீமுக்கு பிரேக்கிங் நியூஸ் பற்றி தெரியவில்லை என மகேஸ்வரி கூறியதை கேட்டு கடுப்பான அசீம் அவரிடம், நீங்கள் நடுவராக இருக்க தகுதியில்லாதவர் என்றும் அதில் நீங்கள் ஜீரோ என்றும் பதிலடி கொடுத்து பேசிய காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது.
#Day26 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ZZ5iB1VmIi
— Vijay Television (@vijaytelevision) November 4, 2022