Skygain News

முதல்முறையாக சிக்கிய போட்டியாளர்.அப்போ இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கப்பட்டது. வெற்றிகரமாக 40 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சாந்தி, அசல் கோளார், ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர்.தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.

இந்நிலையில் இந்தமுறை ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்டது.இதில் தனலட்சுமி, அசீம், மணிகண்டா ராஜேஷ், ராம், ராபர்ட், அமுதவாணன், கதிரவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் தேர்வான 7 பேரில் மணிகண்டா ராஜேஷ், தற்போது தான் முதன்முறையாக நாமினேஷனில் சிக்கி உள்ளார்.

கடந்த 6 வாரங்களாக நாமினேஷன் பட்டியலில் இடம்பெறாமல் தப்பித்து வந்த மணிகண்டாவை இந்த முறை பிளான் போட்டு மாட்டிவிட்டுள்ளனர். ஆனால் தற்போது வரை பதிவாகி உள்ள வாக்குகளின் படி மணிகண்டாவுக்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளன.

இதைப் பார்க்கும் போது முதன்முறை நாமினேஷனில் சிக்கிய மணிகண்டா தான் இந்த வாரம் வெளியேறுவார் போல தெரிகிறது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.