பிக் பாஸ் சீசன் 6 நாளுக்கு நாள் சரஸ்யமாக செல்கின்றது .21 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த சீசனில் இதுவரை ஜி.பி.முத்து ,அசல் ,ஷாந்தி ,ஷெரினா ,மஹேஸ்வரி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
கடந்த வாரம் நிவாஷினி குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.இந்நிலையில் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற நாமினேட் ஆனவர்கள் அசீம், ராபர்ட், மணிகண்டன், கதிரவன், தனலட்சுமி, அமுதவாணன், ராம் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது மணிகண்டன் மற்றும் ராபர்ட் தானாம். இவர்களில் மணிகண்டன் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.எனவே இந்த வாரம் மணிகண்டன் தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது