பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கி நாற்பது நாட்களை கடந்துவிட்டது.மற்ற சீசன்களை போல இந்த சீசனிலும் சண்டைகள் ,சர்ச்சைகள் என விறுவிறுப்பாக செல்கின்றது.இந்நிலையில் இதுவரை இந்நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து ,ஷாந்தி ,அசல் ,ஷெரினா ,மஹேஸ்வரி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
இதில் ஜி.பி.முத்து தானாக வெளியேற மற்ற போட்டியாளர்கள் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் கடந்த வாரம் டாஸ்க் காரணமாக போட்டியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு கொண்டனர். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போவது என எதிர்பார்த்து இருந்தனர்.

இதற்கிடையே இந்த வாரம் முக்கிய போட்டியாளரான நிவாஷினி பிக்பாஸ் சீசன் 6 போட்டியில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.