21 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய நிலையில், இதுவரை ஜிபி.முத்து, டான்ஸ் மாஸ்டர் சாந்தி, அசல் கோளார், செரீனா, மகேஷ்வரி ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் 6 ஆவது போட்டியாளராக யார் வெளியேறுவார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வாரம் நாமினேஷனில் மொத்தம் ஏழு பேர் இடம் பிடித்தனர். இதில் ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, நிவாஸினி ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்று வருகின்றனர்.இதனிடையே இந்த மூவரில் ஒருவர் தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக ராபர்ட் மாஸ்டர் செய்து வரும் காதல் வேலைகளால் எரிச்சலடைந்த ரசிகர்கள் அவரை தான் வீட்டை விட்டு வெளியேற்றுவார்கள் என எதிர்பார்கப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி இந்த வாரம் நிவாஸினி தான் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறுவார் என தெரிகின்றது. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.