பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவாஷினி, மைனா நந்தினி மற்றும் தனலெட்சுமி ஆகிய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி எவ்வளவு சண்டைகளில் சிக்கினாலும் வழக்கம் போல அதிகபட்ச ஓட்டுகள் பெற்று அசீம் முதலாவதாக சேவ் ஆகியுள்ளார்.

அவரை தொடர்ந்து கதிர், தனலட்சுமி உள்ளனர். மீதமுள்ள அமுதவாணன், ராம், ராபர்ட் மற்றும் மணிகண்டன் ஆகிய நான்கு போட்டியாளர்களும், ஒரே மாதிரியான வாக்குகளை பெற்றுள்ளனர்.இவர்களில் மணிகண்டன் கடைசி இடத்தில் இருப்பதால் அவர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த ராபர்ட் மாஸ்டர் இந்த முறையும் எலிமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.