அண்மையில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மைனா நந்தினி வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.இந்நிலையில் இந்நிகழ்ச்சி ஒருவார்த்தை கடந்து தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.இதில் ஜி.பி. முத்து வீட்டில் தாக்குபிடிக்க முடியாமல் தனது தம்பியை ஏதாவது செய்து வெளியே கொண்டு சென்றுவிடு என கெஞ்சுகிறார், நிகழ்ச்சியில் அவர் முழு ஈடுபாடுடன் இருக்கவில்லை.
ஒருபக்கம் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ஓட்டிங் நடந்து வருகிறது. போட்டியாளர்கள் வெளியே இவரை தான் அனுப்ப வேண்டும் என நாமினேட் செய்துவிட்டார்கள்.
மக்களும் தினமும் தங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு ஓட் செய்து வருகிறார்கள்.

தற்போது வரையிலான நிலவரப்படி நடன கலைஞர் சாந்தி அவர்கள் தான் குறைந்த வாக்குகள் பெற்று கடைசியில் இருக்கிறாராம். அவருக்கு முன் இடத்தில் மகேஸ்வரி இருக்கிறார்.