பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளராக உருவெடுத்துள்ளார் விக்ரமன்.ஆரம்பத்தில் அமைதியாகவே இருந்த விக்ரமன் பின்பு மெல்ல மெல்ல போட்டியில் கலந்துகொண்டார்.
தன் மீது இருக்கும் நியாயத்தை உரக்க சொல்லும் விக்ரமனை ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது.இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் விக்ரமன் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடர் நடித்திருக்கிறார், அந்த செய்தி அண்மையில் வந்தது. தற்போது என்னவென்றால் அவர் சன் டிவியிலும் ஒரு தொடர் நடித்துள்ளாராம்.

2016ம் ஆண்டு EMI தவணை முறை வாழ்க்கை என்ற தொடரில் நடித்திருக்கிறார். ஆனால் இதில் என்ன சோகம் என்றால் இந்த இரண்டு தொடர்களுமே பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.