பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சமீபமாக மஹேஸ்வரி வெளியேற்றப்பட்டுள்ளார்.இதையடுத்து தற்போது வெளியான புதிய ப்ரோமோவில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்திருக்கிறார் விக்ரமன்.ஏ.டி.கே., ராம் மற்றும் அசீம் ஆகியோர் நிவாஷினியை நாமினேட் செய்திருக்கிறார்கள்.நிவாஷினி தவிர்த்து ஆயிஷாவையும் நாமினேட் செய்திருக்கிறார் அசீம்.
#Day36 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/K5Ni1AyPKQ
— Vijay Television (@vijaytelevision) November 14, 2022
ஆயிஷா ஒரு பச்சோந்தி என தெரிவித்துள்ளார். ஆயிஷாவோ ஜனனியை நாமினேட் செய்திருக்கிறார்.முந்தைய வாரங்களை போன்றே இந்த வாரமும் அசீம் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். மைனா நந்தினி மற்றும் குவின்ஸி ஆகியோர் அசீமை நாமினேட் செய்திருக்கிறார்கள். அமுதவாணன், மைனா நந்தினி, மணிகண்டன் உள்ளிட்டோர் தனலட்சுமியை நாமினேட் செய்துள்ளனர்