பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மற்ற சீசன்களை போல இந்த சீசனிலும் ஒரு காதல் ஜோடி மலர்ந்துள்ளதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ராம் ராமசாமி மற்றும் வி.ஜெ.மஹேஸ்வரியை தான் புது காதல் ஜோடி என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
ராம் ராமசாமி விஜே மகேஸ்வரியிடம் மட்டும் ஸ்வீட்டாக ஃபன் பண்ணி வருகிறேன் என படுக்கையில் பேசும் காட்சிகள் பிக் பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. ஆஹா பிக் பாஸ் சீசன் 6லும் ஒரு லவ் டிராக் முதல் வாரத்திலேயே ஆரம்பித்து விட்டதே என கலாய்த்து வருகின்றனர்.

2023ல் நடைபெற உள்ள பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு முதல் ஜோடியாக இவங்க இரண்டு பேரும் தான் போகப் போகின்றனர் என்றே நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது