பிக் பாஸ் சீசன் 6 துவங்கி கிட்ட தட்ட பத்து நாட்கள் ஆகிவிட்டன.வழக்கம் போல இந்த சீஸனும் சர்ச்சைகள் சண்டைகள் என இருந்து வருகின்றன.இந்நிலையில் விஜய் டிவி சீரியல் நடிகையாக மைனா நந்தினி மிகவும் பிரபலம். அவர் தற்போது பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார்.
இன்று பிக் பாஸில் அவர் கடந்து வந்த பாதை பற்றி கூறி இருக்கிறார். அப்போது மற்ற போட்டியாளர்கள் பஸ்ஸர் அழுத்தியதால் அவர் முழுமையாக பேசாமல் வெளியில் வந்துவிடுகிறார்.
அதன் பின் மற்ற சில போட்டியாளர்களிடம் பேசிய மைனா நந்தினி தான் ஆரம்பகாலத்தில் சந்தித்த விஷயங்கள் பற்றி கூறி இருக்கிறார்.

சென்னையில் லோக்கல் ரயில் 11 மணிக்கு மேல் வராது என எனக்கு தெரியாது. ஒருமுறை அப்படி ரயில் நிலையத்தில் இரவில் தூங்கினேன் என மிகவும் சோகமாக கூறியுள்ளார்.