உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கியது. துவங்கிய ஒரு வாரத்திலேயே சண்டைக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் செல்கின்றது பிக் பாஸ். இதன் காரணமாக தற்போது நிகழ்ச்சி சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சீசனில் பலருக்கும் பிடித்த போட்டியாளராக ஜி.பி.முத்து மாறியுள்ளார். தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஜிபி முத்துவை தலைவரே…. தலைவரே என அழைத்து வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
இதன்மூலம் அவர் கேப்டன்சி டாஸ்கில் வெற்றிபெற்றுவிட்டார் போல தெரிகிறது. அதனால் அவரை கேப்டன் என்று அழைப்பதற்கு பதிலாக தலைவரே என அழைத்து வருகிறார்கள் போல் இருக்கிறது.
#Day8 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/3ZnOdeHI6x
— Vijay Television (@vijaytelevision) October 17, 2022
இதன்மூலம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக ஜிபி முத்து தேர்வாகி உள்ளார்.இதன் காரணமாக ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.