பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஏலியன், பழங்குடியின மக்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் விதிப்படி ஏலியன் அணியில் இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து ஆதிவாசி அணியினர் என்ன செய்தாலும் சிரிக்கவோ, கோபப்படவோ கூடாது.
அப்படி சிரித்தாலோ, கோபப்பட்டாலோ அவர்கள் தோற்றதாக அறிவிக்கப்படுவர். அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் ஏலியன் அணியை சேர்ந்த மணிகண்டன் கோபப்பட்டதாக ஆதிவாசி டீமில் உள்ள ஷிவின், அசீம் ஆகியோர் கூறுகின்றனர்.
இதற்கு அசீம் கோபப்பட்டது வேற ரியாக்ஷன் வேற என மணிகண்டனிடம் சொல்லிக்கொண்டிருக்க, அருகில் இருந்த ஏலியன் அணியை சேர்ந்த ஜனனி, லூசு மாதிரி கதைக்காதீங்கனு அசீமை பார்த்து சொல்கிறார்.லூசு, கீஸுனுலாம் பேசாத ஜனனி, எப்படி நீ என்ன லூசுனு சொல்வ என அசீம் கேட்க, கையை இறக்கிட்டு கதைங்க என்று சீறினார் ஜனனி.
#Day51 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/TqVhnxGH5Y
— Vijay Television (@vijaytelevision) November 29, 2022
இறுதியில் இனிமேல் என்னை அசீம் என்று பெயர் சொல்லி கூப்பிட்டால் அவ்வளவு தான் என ஜனனிக்கு வார்னிங் கொடுக்கும் காட்சிகளும் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன.