பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக செல்லும் இந்த சீசனில் சண்டைக்கும் ,சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் செல்கின்றது. காதல், நகைச்சுவை, மோதல் என ஒரு கமர்ஷியல் கலவையாக இந்த சீசன் செல்வதால் ரசிகர்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த சீசனில் இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.ஜி.பி.முத்து ,ஷாந்தி ,அசல் ,ஷெரினா ஆகியோயே எலிமினேட் ஆகியுள்ளார்.இதில் ஜி.பி.முத்து தானாகவே வீட்டை விட்டு வெளியேறினார்.மற்ற மூவரும் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் இந்நிலையில், இந்த வாரம் எவ்விஷனுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதன்படி விக்ரமன், அசீம், ஆயீஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி, ADK உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
#Day29 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/9vUQgBYciQ
— Vijay Television (@vijaytelevision) November 7, 2022
இதில் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்ற ராம் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது
