கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் மூன்று முறை பறவை காச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூனாவது முறையாக பறவை பார்க்க காய்ச்சல் பாதிப்பு தற்போது ஏற்பட்டு இருக்கிறது. கேரள மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1500 வாத்துகள் திடீரென்று இறந்தன. இந்நிலையில் கால்நடை பராமரிப்பு துறையில் இறந்து போன வாத்துக்களின் மாதிரிகளை சேகரித்து போபால் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து ஆலப்புழா மாவட்ட நகராட்சி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்து பறவை காய்ச்சல் வேறு இடங்களுக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
