பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சென்னையில் சந்தித்த பொது “கோவை மாவட்ட மக்களுடன் சேர்ந்து கோவை மாவட்ட பாஜக சில அமைப்புகள் நிறுவனங்கள் முழு அடைப்பு நடத்துகின்றன. முழு அடைப்பு போராட்டத்திற்கும் எனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. கோவை பந்த் தொடர்பாக நான் யாருக்கும் அழைப்பு விடுக்க வில்லை என்பதை நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. கோவை கடையடைப்பு விவகாரத்தில் மாநில பாஜக நிர்பந்திக்கவில்லை. கடை அடைப்பு குறித்து கோவை மாவட்ட பாஜகவும் மக்களும் முடிவு செய்வார்கள்.

பத்திரிகையாளருடனான எனது அணுகுமுறை உங்களுக்கு தெரியும். நான் இரு பத்திரிகையாளர்களை மட்டுமே அப்படிப் பேசினேன். பத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியதே தவறாக சித்தரித்து பரப்புகிறார்கள். மக்கள் வெறுப்புக்கு உள்ளாகும் திமுகவினர் என்னைப் பற்றி அவதூறு பரப்புகின்றனர். என்ஐஏ தீவிரவாதத்தை நன்கு ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை எடுக்கக் கூடிய ஒரு அமைப்பு. 18ம் தேதியே மாநில காவல் துறைக்கு மத்திய உளவுத்துறை கோவை கார் வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. நான்கு நாட்கள் தாமதப்படுத்தி என்ஐஏவுக்கு கோவை சம்பவம் மாற்றப்பட்டது ஏன்? மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என டிஜிபி கூறுகிறார் .ஆனால் 18ஆம் தேதி தகவல் வந்தும் ஏன் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கவில்லை?

பாஜக பெண்களை இழிவாக பேசிய திமுக தலைமை கழக பேச்சாளரை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும். அரசியல் மற்றும் ஊடக துறையில் உள்ள பெண்களுக்கு பாஜக பக்கபலமாக இருக்கும் . பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை பற்றி திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியுள்ளார். அவரை உடனே கைது நடவடிக்கை எடுக்க வேண்டு. ம் திமுக நிர்வாகி ஆபாச பேச்சுக்கே திமுக எம்பி கனிமொழி கன்னடம் தெரிவித்துள்ளார். அவருக்கு எனக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.