வேலூர் மாநகராட்சியின் அவல நிலையை கண்டித்தும், ஊழலை கண்டித்தும் நேற்று காலை சுமார் 300 க்கும் மேற்பட்ட பாரதிய ஜனத கட்சியினர் வேலூர் மாநகராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டும். காவல் துறையினரின் தடுப்பை மீறி மேயர் அலுவலக அறையை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு உருவானது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது, அரசு பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, உயிருக்கு அச்சுருத்தும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் பா.ஜ.கவினர் 103 பேர் மீது வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 103 பேரையும் நீதி மன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.