பார்த்திபனின் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான இரவின் நிழல் அண்மையில் வெளியானது. இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பார்த்திபனின் முயற்சியை வியந்து பாராட்டினார். மேலும் இந்தப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் மிகப்பெரும் முயற்சியை பாராட்டி தள்ளினர்.
இந்தப்படத்தை உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷார்ட் பிலிம் என விளம்பரப்படுத்தினார் பார்த்திபன். ஆனால் இதனை மறுத்த திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், இதற்கு முன்பாகவே நான் லீனியர் சிங்கிள் ஷார்ட் பிலிம் வெளியாகியுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது.
பார்த்திபன், மாறன் இருவரும் மாறி மாறி ட்விட்டரில் பதிவிட்டது இணையத்தில் பரபரப்பை கிளப்பியது.இந்நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள ‘இரவின் நிழல்’ படத்தை அமேசான் ப்ரைம் மற்றும் ஐஎம்டிபி தளங்களில், உலகின் இரண்டாவது நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என குறிப்பிட்டுள்ளனர்.
வாய் வெல்லாது. வாய்மையே வெல்லும்.
— Blue Sattai Maran (@tamiltalkies) November 12, 2022
Iravin Nizhal is not the first single shot movie. Mentioned in Amazon Prime and IMDB site. pic.twitter.com/396QDgrGmw
இதன் ஸ்க்ரீன் ஷாட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், ‘வாய் வெல்லாது. வாய்மையே வெல்லும்’ என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.