தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் பல இடங்களில் நுழைந்துள்ளது
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் வீசிய சூறாவளிக் காற்றில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது. அடுத்த மூன்று தினக்களுக்கும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், சூறாவளி காற்று தொடரும் எனவும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், படகுகள் சேதமடைந்துள்ளது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.