விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையம் சுமார் 6 கோடி 74 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன பேருந்து நிலையமாக மாற்றுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது . திடீர் மழை காரணமாக செஞ்சி பேருந்து நிலையம் வாய்க்கால் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து அடைப்பு ஏற்பட்டதை அடுத்து தகவல் அறிந்த செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் உடனடியாக கொட்டும் மழையிலும் அங்கு விரைந்து சென்று பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே ஜே.சி.பி இயந்திரம் கொண்டு மழையில் நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் பேரூராட்சி ஊழியர் மூலம் ஈடுபட்டனர்.
உடனடி நடவடிக்கையால் அங்கு மழைநீர் வெளியேற்றப்பட்டதையெடுத்து பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தானுக்கு பகுதி மக்கள் பாராட்டுகளையும் நன்றிகளும் தெரிவித்தனர்.