ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இன்று காலை பாம்பன் பாலம் வழியாக பயணித்த போது திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த இரண்டு அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பது.

பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் இரண்டும் வந்தபோது ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியதில் இரண்டு பேருந்துகளில் இருந்த பயணிகள் , ஓட்டுனர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் மற்றும் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இன்று அதிகாலை பெய்த மழையின் காரணமாக பாலத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தால் பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. கடந்த12ம் தேதி இதேபோல தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பாலத்தில் விபத்தில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.