Skygain News

என்னது இன்ஸ்டாகிராம் லாகின் செய்யாமல் ரீல்ஸ் டவுன்லோட் பண்ணலாமா..? யாரும் அறியாத டக்கர் தகவல்…

அன்றாட வாழ்க்கையில் சமூகவலைதளம் முக்கிய பங்காக  வகிக்கிறது. சமூகவலைதளம் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல்  சிலருக்கு தொழிலாக மாற்றியுள்ளது . சிலர் யு டூப் சேனல்  மூலம் வீடியோ செய்து பணம் சம்பாதிக்கின்றனர். அதுபோல், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த  தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. 

சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை இன்ஸ்டாகிராமில் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அதில், பிரபலங்கள் அவர்களைப் பற்றின அப்டேட்களை ரசிகர்களுக்கு உடனுக்குடன் கொடுக்கின்றனர். இந்த இன்ஸ்டாகிராமில் மேலும் ஒரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் இதில் ரீல்ஸ் வசதியும் உள்ளது.

அதில் வரும் பாடல்களை பாடியும், சினிமா வசனத்திற்கு ஏற்ப நடித்தும், பாடலுற்கேற்ற நடனமாடியும் ரீல்ஸ் செய்து பதிவிடுகின்றனர். இந்த வசதி பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமிலிருந்து இந்த ரீல்ஸை டவுன்லோட் செய்து பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

 அந்தவகையில், ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் இன்ஸ்டாகிராம்  ரீல்ஸ் டவுன்லோட் செய்வதற்காக மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர். 

அப்போது, உங்கள் இன்ஸ்டா கணக்கு மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமிற்குள் சென்று பிடித்தமான ரீல்ஸ் டவுன்லோட் செய்வீர்கள்.

ஆனால் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இன்ஸ்டாவிற்குள் நுழையாமல் பாதுகாப்பாக ரீல்ஸ் டவுன்லோட் செய்யலாம். ஐகிராம் (iGram – website) என்னும் இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் ரீல்ஸ் டவுன்லோட் செய்யலாம்.

டவுன்லோட் செய்யவேண்டிய ரீல்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும்

       உங்களுக்கு பிடித்தமான ரீல்ஸை ஆன்லைனில் தேடி எடுத்து, அதன் லிங்கை காபி செய்து கொள்ள வேண்டும். லிங்க் காபி செய்ய, ரீல்ஸ் வீடியோ கீழே ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்குள் சென்று காபி  லிங் என கொடுக்க வேண்டும்.

ஐகிராம் இணையதளம்

       ஆன்லைன் ரீல்ஸ் டவுன்லோடிங் இணைதளமான ஐகிராமிற்கு சென்று, காபி செய்ய லிங்கை பதிவிட வேண்டும். ஐகிராம் இணையதளத்தை ஃபோன், கம்யூட்டரில் பயன்படுத்தலாம்.

ரீல்ஸ் டவுன்லோட்

       காபி செய்ய லிங்கை ஐகிராமில் பதிவிட்ட பின், ‘டவுன்லோட்’ என்ற ஆப்ஷன் அருகில் கொடுக்கப்பட்டிருக்கும், அதில் ‘டவுன்லோட்MP4’ (Download mp4) எனக் கொடுத்து ரீல்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More