தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா உரிய கொரோனா முன்னெச்சரிக்கையுடன் நடைபெற்றது. இதில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . அப்போது பேசிய அவர், உங்கள் கேப்டன் நலமாக இருக்கிறார் .
கேப்டன் தமிழகத்தில் நடப்பதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் .எந்த நோக்கத்திற்காக இந்த கட்சி துவங்கப்பட்டதோ . நிச்சயம் நாம் அதை அடைவோம். நாம் செய்த உதவிகளோ தர்மங்களோ என்றும் எப்போதும் வீண் போகாது . எழுதாத பேனாவிற்கு கோடி ரூபாய் செலவில் சிலை வைப்பதற்கு பதில், மக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்யலாமே? இல்லையென்றால் பேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாமே? என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், புகை , மது உள்ளிட்ட பழக்கங்களில் சம உரிமை வேண்டும் என பெண்கள் ஈடுபடக் கூடாது. புகை ,கஞ்சா , மது உள்ளிட்ட பழக்கத்திற்கு ஆளாவதால் பெண்கள் பாலியல் துன்பத்தில் சிக்குகிறார்கள். ஆண்களுக்கு நிகராக சாதிப்பதில் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.