ஒரு விசித்திர சம்பவமாக, நாக்பூரில் இருந்து மும்பைக்கு 90 கன்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரயிலையே காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1ஆம் தேதி மிகான் கன்டெய்னர் முனையத்தில் இருந்து புறப்பட்ட ரயில், அடுத்த 4 அல்லது 5 நாட்களில் மும்பையை அடைந்திருக்க வேண்டும். ஆனால், 13 நாட்களாகி விட்ட பிறகும் 90 கன்டெய்னர்களுடன் ரயிலின் இருப்பிடத்தை அறிய இயலாமல் அதிகாரிகள் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது. கன்டெய்னர்களில் ஏற்றுமதிப் பொருட்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில், ரயிலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
