இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய சீனியர் வீரர்கள் ஆடவில்லை. எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.ஆனால் சஞ்சு சாம்சனுக்கு ஆட வாய்ப்பு கிடைக்காததுதான் சர்ச்சையானது.
நியூசிலாந்து தொடரில் ஆடும் லெவனில் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா ஆகிய இருவரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. எனவே சஞ்சு சாம்சன் எடுக்கப்படாதது சர்ச்சையானது. அவர்களில் யாருக்காவது பதில் சஞ்சு சாம்சனை ஆடவைத்திருக்கலாம் என பேசப்பட்டது.இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா ,வெளியிலிருப்பவர்கள் பேசுவதை பற்றி எங்களுக்கு கவலையில்லை.
அது எங்களை பாதிக்கவும் செய்யாது. இதுதான் என் அணி. பயிற்சியாளருடன் ஆலோசித்து சிறந்த அணியுடன் ஆடினோம். இது சிறிய தொடர். பெரிய தொடரில் அனைத்து வீரர்களுக்கும் அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்படும். தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த மாதிரியான தொடர்களில் அனைவரும் ஆடவைக்கப்படுவார்கள்.

தீபக் ஹூடா கூடுதல் பவுலிங் ஆப்சனை வழங்கினார். அதுமாதிரியான ஆப்சன் இருக்கும்போது எதிரணியை சர்ப்ரைஸ் செய்ய முடியும் என்றார் ஹர்திக் பாண்டியா.