தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் நீண்ட வருடங்ளுக்கு பிறகு அண்மையில் பனையூரில் தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் மீடியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தனது ரசிகர்களுக்கும் பிரியாணி விருந்து அளித்துள்ளார்.

இந்நிலையில் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் அபாராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் தன்னுடைய காஸ்ட்லி காரில் வந்த போது, இதில் தடை செய்யப்பட்ட கருப்பு நிற சன் ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததால், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.