Skygain News

business

பல்வேறு நிறுவனத்தை தொடர்ந்து தற்போது மீட்டும் முக்கிய நிறுவனமான ஒன்று 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறதா..?

பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதன்படி பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இப்படி முக்கிய நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்கள் …

பல்வேறு நிறுவனத்தை தொடர்ந்து தற்போது மீட்டும் முக்கிய நிறுவனமான ஒன்று 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறதா..? Read More »

தாத்தா ஆன முகேஷ் அம்பானி..!

தொழில் அதிபர் மற்றும் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி ஆவார். இவருக்கும், பிரமல் குழுமத்தின் தலைமை இயக்குனரான ஆனந்த் பிரமலுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இஷா அம்பானிக்கும், ஆனந்த் பிரமலுக்கும் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நிடா அம்பானி மற்றும் ஆனந்தின் பெற்றோர் அஜய் பிரமல், ஸ்வாதி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ‘நேற்று முன்தினம்(சனிக்கிழமை) …

தாத்தா ஆன முகேஷ் அம்பானி..! Read More »

சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

சேலம் மாவட்டம் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 55 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சேலம் மாவட்ட காவல் துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : சேலம் மாவட்டம் ஊர்க்காவல் படையில் ஆத்தூர் மற்றும் சங்ககிரி படை பிரிவில் (ஆண்கள்- 52, பெண்கள்-3 ) 55 காலிப் பணியிடங்கள் நிரப்ப, தகுதியுள்ள நபர்கள் 26.22.2022 அன்று சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் …

சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.. Read More »

தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தைகள்..! சென்செக்ஸ் 548 புள்ளிகளாக உயர்வு…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சற்று உயரம் சென்றுள்ளது . சென்செக்ஸ் 548 புள்ளிகள் அதிகரித்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் சிறிய சரிவுடன் தொடங்கினாலும் பின்னர் பங்கு வர்த்தகம் படிப்படியாக ஏற்றம் கண்டது. பன்னாட்டு நிதியம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை குறைத்தது போன்ற எதிர்மறையான செய்திகள் இருந்தபோதும் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா …

தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தைகள்..! சென்செக்ஸ் 548 புள்ளிகளாக உயர்வு… Read More »

(25-07-2022) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.37,760-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலையில் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்வது வாடிக்கையான ஒன்றுதான். அதற்கேற்ப கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் மத்திய அரசு, தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதனைத்தொடர்ந்து தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட ஒரு வார காலத்தில் மட்டும், …

(25-07-2022) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..! Read More »

செம குஷியில் முதலீட்டாளர்கள் : தொடர்ந்து 6வது வர்த்தக தினமாக உயர்ந்த பங்கு வர்த்தகம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. நிறுவனங்களின் ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் எச்.டி.எப்.சி. உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இன்போசிஸ் மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை …

செம குஷியில் முதலீட்டாளர்கள் : தொடர்ந்து 6வது வர்த்தக தினமாக உயர்ந்த பங்கு வர்த்தகம்.. Read More »

(21-07-2022) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

தமிழகத்தில் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4.630-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 61 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.