Skygain News

cinema

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார். சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பல பிரச்சினைகள் எனக்கும் நடந்துள்ளது. ஹீரோ, டைரக்டர் இவர்கள் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண முடியுமா எனக் கேட்டுள்ளனர். எனக்கு அப்படிபட்ட வாய்ப்புகள் வேண்டாம் என்று மறுத்துவிடுவேன். எந்தவொரு குற்றஉணர்வும் இல்லாமல் இரவில் நிம்மதியா தூங்க வேண்டும். நடிக்க வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டேன் எனக் கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் சேர்த்த மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாகவே சிவகார்த்திகேயன் உள்ளார். பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் ஹீரோவான நிலையிலும், சாதிக்க முடியாத இடத்தை சினிமா பேக்கிரவுண்டே இல்லாமல் உள்ளே நுழைந்து தனது பெரும் முயற்சியால் சாதித்து, ஏகப்பட்ட புதுமுக நடிகர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாகவே மாறிவிட்டார். சினிமாவில் நுழைந்து வெறும் 11 ஆண்டுகளில் தனது கடும் உழைப்பால் வெற்றி, தோல்விகளை சந்தித்து வந்தாலும் துவண்டு விடாமல் போராடி வரும் சிவகார்த்திகேயனுக்கு ஒட்டுமொத்தமாக 110 கோடி சொத்து இருப்பதாக …

சிவகார்த்திகேயன் சேர்த்த மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா? Read More »

பகாசுரனுக்கு அண்ணாமலை வாழ்த்து..!

இயக்குனர் செல்வராகவன் நடிப்பு உலகிற்கு அடியெடுத்து வைக்கும் ‘ பகாசுரன் ‘ படத்தின் மூலம் பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் டிஓபி நடராஜ், ராதாரவி, ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா உள்ளிட்ட திறமையான நடிகர்கள் நடித்துள்ள படம். இந்நிலையில் பகாசூரன் வெற்றியடைய பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார். அவரது டுவீட்டில் ‘பகாசுரன் படம் மாபெரும் வெற்றி படமாக அமைய வேண்டும் என்று தனது வாழ்த்துக்களை பட குழுவினருக்கும் இயக்குனர் மோகன் ஜிக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டு …

பகாசுரனுக்கு அண்ணாமலை வாழ்த்து..! Read More »

அனுஷ்காவிற்கு அரிய நோயா?

நடிகை அனுஷ்கா அரிய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அனுஷ்கா ஷெட்டிக்கு சிரிப்பு வரும் போது எல்லாம் அவர் 20 நிமிடங்கள் சிரித்துக் கொண்டே இருப்பார். இது அரிதான நோய் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. மேலும், இந்த செய்தியை அனுஷ்கா ஒரு தமிழ் பேட்டியில் தெரிவித்தது இருப்பதாக சொல்லி வைரலாகி வருகிறது. ஆனால் இதில் உண்மை இல்லை, இதில் உள்ள உண்மை குறித்து அனுஷ்காவே வெளியில் வந்து விளக்கம் அளித்தால், இந்த செய்தி நிச்சயம் உடைந்து விடும் …

அனுஷ்காவிற்கு அரிய நோயா? Read More »

காதலர் தினத்தில் தமன்னா தன் காதலை உறுதிப்படுத்தினரா?

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் தமன்னா தற்போது இந்தியில் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார்.30 வயதை கடந்த தமன்னாவின் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தக் கேள்விக்கு அவர் தன்னுடைய செயலால் பதிலளித்து வருகிறார். பாலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா டேட்டிங்கில் உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று காதலர் தினத்தையொட்டி, விஜய் வர்மா சமூக வலைதளத்தில் …

காதலர் தினத்தில் தமன்னா தன் காதலை உறுதிப்படுத்தினரா? Read More »

டாடா திரைப்படத்தின் வெற்றியைத் தடுக்காதீர்கள்: இயக்குனர் பேரரசு…!

“டாடா” படத்தைப் பற்றி இயக்குனர் பேரரசு பேசுகையில், இதயத்தில் பூகம்பத்தை ஏற்படுத்துகிற காதுக்குள் சரவெடி சத்தத்தை ஏற்படுத்துகிற திரைப்படங்களின் மத்தியில் உணர்வுபூர்வமான இதயத்தில் பூவை வைக்கிற மாதிரி ஒரு படமாக ‘டாடா’ திரைப்படம் அமைந்திருக்கிறது. இப்படத்தில் சில குறைகள் இருக்கலாம்,விமர்சனத்திற்கு உள்ளான காட்சிகள் இருக்கலாம் அதை பெரிதுபடுத்தி இந்த படத்தை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டாம். இப்படி எப்பொழுதோ வரும் படத்திற்கு நாம் விமர்சனங்கள் என்ற பெயரால் எதிர்ப்புகளை வலுக்கச் செய்தால் மீண்டும் வெறும் வியாபார படங்களுக்குள் …

டாடா திரைப்படத்தின் வெற்றியைத் தடுக்காதீர்கள்: இயக்குனர் பேரரசு…! Read More »

சப்தம் படத்தின் அப்டேட்…!

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான படம் ‘ஈரம்’. ஈரம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.நடிகர் ஆதி நடிக்கும் இப்படத்தை 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இந்நிலையில் மூணாறில் நடைபெற்ற படப்பிடிப்பின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது. இந்தத் திரைப்படம் மிரட்டலாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

‘லவ் டூடே’ திரைப்படத்தின் 100ஆவது நாள் வெற்றிவிழா…

வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தின் 100ஆவது நாள் வெற்றிவிழாவை படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடினர். சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற விழாவில் படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், நடிகை இவானா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். லவ் டுடே படத்திற்கு பிறகு தமது வாழ்க்கை வேறுமாதிரி செல்வதாக நடிகை இவானா பேசினார். சிரமத்தை எதிர்கொண்டால் தான் வெற்றி எனும் மலையை …

‘லவ் டூடே’ திரைப்படத்தின் 100ஆவது நாள் வெற்றிவிழா… Read More »

வாத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு…!

தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கி இருக்கும் வாத்தி படத்தில் சம்யுக்தா , சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சரத்திரங்கள் நடித்துள்ளனர். வரும் 17ம் தேதி இப்படம் வெளியாகும் நிலையில் , படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள வாத்தி ட்ரெய்லரை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே இளையராஜா இசையமைக்க நடிகர் தனுஷ் பாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் டிரண்டு …

வாத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு…! Read More »

அஜித்தின் ‘AK 62’ பட இசையமைப்பாளர் இவரா..?

அஜித்தின் Ak 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும், மகிழ்திருமேனியுடன் கை கோர்த்து உள்ளதாக தகவல்கள் வெளியானது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் ஏன்று எதிர்பார்க்கப்படுகிறது.அஜித் 62 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில், சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்ய லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.அஜித்தின் படத்திற்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று நம்பப்படுகிறது.