டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி வீரர் நீக்கம்? 2வது டெஸ்டில் தொடக்கமே பின்னடைவு!
ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முக்கியமான மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது.ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் வழி விட்டுள்ளார். முதல் டெஸ்டில் அறிமுகமான சூர்யகுமார் வெறும் 8 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார். எனவே அவர் இன்னும் சிறிது நாட்கள் வெளியில் அமர வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ளனர்.