Skygain News

tamilnadu

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை:
விமானத்தில் பறந்த கொள்ளையன்?

திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியாவிலேயே நடைபெற்றதிலேயே மிகப்பெரிய கொள்ளை சம்பவமாக பார்க்கப்படுகிறது. வெறும் 2 மணி நேரத்தில் 72 லட்சம் ரூபாய் இங்கே கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில்தான் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குஜராத்திற்கு விமானம் மூலம் தப்பி சென்ற 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  ஹரியானாவை சேர்ந்த கும்பல்தான் இதை செய்தது என்பது உறுதியாகி உள்ளது. 

உயிருடன் பிரபாகரன்- விரைவில் போட்டோ, அறிக்கை வரும்- காசி ஆனந்தன்…

திடீரென தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன்,தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற தகவலை அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் உலகத் தமிழருக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.இந்நிலையில் கவிஞர் காசி ஆனந்தன், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறியது முதல் கட்ட தகவல் மட்டும்தான். பிரபாகரன் உயிருடன் இருக்கும் படங்கள், அவரது குடும்பத்தினர் படங்கள், பிரபாகரனின் அறிக்கை எல்லாம் இனி வெளியாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் …

உயிருடன் பிரபாகரன்- விரைவில் போட்டோ, அறிக்கை வரும்- காசி ஆனந்தன்… Read More »

கே.என் நேரு ஒரு கோவக்காரர் – கனிமொழி..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரித்தார். அப்போது கனிமொழி பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிச்சயம் திமுக கூட்டணி வெற்றிபெறும். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. மேலும் அமைச்சர் கே.என்.நேருவின் கோபத்தை பற்றி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பலமுறை பேசி இருக்கிறார். அந்தக் கோபம் இன்னும் நிற்கவில்லை. பல நேரங்களில் வைரலாக போகிறது. பொறுமை எல்லாம் ஓரளவுக்கு தான். அதேபோல் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் என்பதால், எதை வேண்டுமானாலும் …

கே.என் நேரு ஒரு கோவக்காரர் – கனிமொழி..! Read More »

நீ சரியான ஆம்பளையா இருந்தா? வார்த்தையை விட்ட எடப்பாடி…

ஈரோடு பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 21 மாதமாக மக்களை அமைச்சர்கள் சந்திக்கவே இல்லை. ஆனால் இப்போது தேர்தல் என்றதும் மக்களை சந்திக்கிறார்கள்.நீ சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா.. நேரா வெளியே வந்து மக்களை சந்தி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். இயக்குனர் நவீன் அவரின் இந்த பேச்சு தொடர்பாக போஸ்ட் செய்துள்ளார். அவர் தனது போஸ்டில் ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் …

நீ சரியான ஆம்பளையா இருந்தா? வார்த்தையை விட்ட எடப்பாடி… Read More »

சேலத்துக்கே கிளம்பி வந்த முதல்வர் ஸ்டாலின்: சர்ப்ரைஸ் விசிட்…!

தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்றைய தினம் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். சேலத்தில் 2 நாள் முகாமிடும் முதல்வர், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட அரசு நிர்வாக செயல்பாடுகள், சட்டம், ஒழுங்கு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ள போகிறார். முதல்வர் ஸ்டாலினின் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு சேலத்தில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அரசு துறை …

சேலத்துக்கே கிளம்பி வந்த முதல்வர் ஸ்டாலின்: சர்ப்ரைஸ் விசிட்…! Read More »

ஓபிஎஸ், சசிகலா கூட்டணியா? பிப்.20ல் ஆலோசிக்கும் ஓபிஎஸ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.  ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது.  இந்நிலையில் சென்னையில் பிப்ரவரி 20ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதில் சசிகலாவுடன் சேர்வது, இ பி ஸ்-க்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கை உள்ளிட்டவை …

ஓபிஎஸ், சசிகலா கூட்டணியா? பிப்.20ல் ஆலோசிக்கும் ஓபிஎஸ்! Read More »

ஆன்லைன் சூதாட்டம்: வருகிறது புதிய சட்டம்…

ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசின் சட்டமே தேவைப்படுவதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார் நாடாளுமன்ற மக்களவையில் பதிலளித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இவ்விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு இடையில் கருத்தொற்றுமை அவசியம் தேவைப்படுவதாக தெரிவித்தார். பரந்து விரிந்த டிஜிட்டல் உலகில் மாநிலம் என்ற குறுகிய வட்டத்திற்குள் சட்டம் இயற்றி கட்டுப்பாடுகளை கொண்டு வர முடியாது எனஅவர் தெரிவித்தார். பந்தயம் கட்டுதல், சூதாட்டம் போன்றவை மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வந்தாலும் …

ஆன்லைன் சூதாட்டம்: வருகிறது புதிய சட்டம்… Read More »

வீட்டிலேயே முடங்கிய ஓபிஎஸ்…!

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் ஒரு வழியாக அதிமுக தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி உள்ளது. கே. எஸ் தென்னரசு சார்பாக பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் அதிமுகவில் எடப்பாடி அணி இப்படி தீவிரமாக பணிகளை செய்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் அப்படி ஒடுங்கி போய் இருக்கிறாராம்.  அண்ணன் அதிரடி அரசியல் செய்யாமல்.. அன்பாக டெல்லியின் ஆதரவை பெற முயன்றார். யாரையும் அவர் எதிர்க்கவில்லை. எடப்பாடியிடம் கூட என்னை சேர்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் …

வீட்டிலேயே முடங்கிய ஓபிஎஸ்…! Read More »

இன்னும் மழை இருக்கு..மக்களே உஷார்

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மூன்று அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்…

ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரியா (36). இவர் இவரது இரண்டு பெண் குழந்தைகளுடன் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் தனது ஊருக்கு செல்ல ஆரணி பேருந்து நிலையத்தில் மூன்றாம் நம்பர் அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.அப்போது மேல்புதுபாக்கம் அருகே பேருந்து வந்ததும் அனைத்து பயணிகள் இறங்கி உள்ளனர். வாழைப்பந்தல் செல்ல ஜெயப்பிரியா மட்டும் பேருந்தில் இருந்ததால் அப்பகுதிக்கு பஸ் போகாது என நடத்துனர் சொல்லி உள்ளார்.அதற்காக அந்த பெண் நடத்துன ரிடம் …

மூன்று அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்… Read More »