Skygain News

tamilnadu

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் இசைஞானி இளையராஜா..!

விளையாட்டு, சமூக சேவை ,பொழுதுபோக்கு , இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அந்தவகையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் . மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா,ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த திங்களன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக …

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் இசைஞானி இளையராஜா..! Read More »

தஞ்சையில் 65 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற பிரமாண்ட திருவிழா..! 1000 கிடா வெட்டி சாதி வேற்றுமை மறந்து ஊருக்கே போடப்பட்ட கறி விருந்து..!

திருவிழாவை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டு ஊர் முழுக்க வீடு வீடாக சென்று கட்டணம் வசூலிக்கப்பட்டது . பூஜை, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது போக பிரமாண்ட ஊர் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை …

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… Read More »

தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6.35 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி..!

தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு ரூ.323.03 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி இன்று அத்திட்டத்தை தொடங்கிவைத்தார். மேல்நிலைப் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் சிரமமின்றி பள்ளிக்குசெல்லும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்குக்கும், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் …

தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6.35 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி..! Read More »

குடியரசு தலைவராக தேந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி..!

நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற நிலையில் நேற்று முன் தினம் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அதிக வாக்குகள் பெற்று இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக வெற்றிவாகை சூடினார். தேசிய …

குடியரசு தலைவராக தேந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி..! Read More »

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வர மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வர மீனவர்கள், இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ராமேஸ்வரம் துறைமுக கடல் பகுதியில் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் சுமார் 10,000 கும் மேற்பட்ட மீனவர்களும் அதைச் சார்ந்த தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.

ரூட் தல மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!

ரூட் தல என்ற பெயரில் பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனாவால் மூடப்பட்டிருந்த அனைத்து கல்லூரிகளும் தற்போது திறந்துள்ள நிலையில், அனைத்து கல்லூரிகளுக்கும் தகுந்த காவல்துறை பாதுகாப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணித்து வரப்படுகிறது. மேலும், கல்லூரி மாணவர்கள் செல்லும் முக்கிய பஸ் மற்றும் ரெயில் வழித்தடங்களிலும் …

ரூட் தல மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த காவல்துறை..! Read More »

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வன்னிபேர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகதாஸ், வெங்கடேசன், மற்றும் சுப்பிரமணி, இவர்கள் மூவரும் தினமும் வேட்டைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர் . அந்தவகையில் மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு வேட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது விவசாயி பத்மநாபன் என்பவர் பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை விரட்டுவதற்காக தனது நிலத்தை சுற்றி மின்வேலியை அமைத்துள்ளார். இதை கவனிக்காத முருகதாஸ், வெங்கடேசன் மற்றும் சுப்பிரமணி மூவரும் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் …

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..! Read More »

தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர். நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 …

தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை Read More »