Skygain News

technology

படிப்படியாக குறையப்போகும் பெட்ரோல், டீசல் கார் தயாரிப்பு…

2035 ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை தடுக்கும் விதமான சட்டத்திற்கு ஐரோப்பிய நாடளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் விதமாகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2035 ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு சதவீதத்தை பூஜ்ஜியமாக மாற்றவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு பிற நாடுகளும் ஒத்துழைப்பு தந்து, பின்பற்ற வேண்டும் எனவும் ஐரோப்பியா கேட்டுக்கொண்டுள்ளது.

மெமொரீஸ் இனி இன்ஸ்டகிராமிலும்….

ஃபேஸ்புக் போலவே இன்ஸ்டகிராம் பக்கத்திலும் இனி பழைய நிகழ்வுகளை நினைவுப்படுத்தும் வசதி வரப்போகிறது. ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதை அதிகமாக பயன்படுத்தாவிட்டாலும், நீங்கள் ஏற்கெனவே பதிவிட்ட விஷயங்களை திடீரென நினைவுபடுத்தி ஃபேஸ்புக்கில் தகவல் வருவதைக் கண்டிருக்கலாம். இதே நாளில் நீங்கள் பதிவு செய்தது என்ற வகையில் நினைவூட்டல் செய்தி வருவது வழக்கம். ஃபேஸ்புக்கில் கண்டிருக்கக்கூடிய இந்த வசதி, இன்ஸ்டகிராமிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான பணிகளில் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

ஆன்லைன் சூதாட்டம்: வருகிறது புதிய சட்டம்…

ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசின் சட்டமே தேவைப்படுவதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார் நாடாளுமன்ற மக்களவையில் பதிலளித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இவ்விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு இடையில் கருத்தொற்றுமை அவசியம் தேவைப்படுவதாக தெரிவித்தார். பரந்து விரிந்த டிஜிட்டல் உலகில் மாநிலம் என்ற குறுகிய வட்டத்திற்குள் சட்டம் இயற்றி கட்டுப்பாடுகளை கொண்டு வர முடியாது எனஅவர் தெரிவித்தார். பந்தயம் கட்டுதல், சூதாட்டம் போன்றவை மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வந்தாலும் …

ஆன்லைன் சூதாட்டம்: வருகிறது புதிய சட்டம்… Read More »

சாம்சங் கேலக்சி எஸ்23 சீரிஸ் புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம்…

சாம்சங் நிறுவனத்தின் Galaxy S23 Series புதிய மாடல் மொபைல் ஃபோன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விழாவில், சாம்சங் Galaxy S23 Series மாடல் ஃபோனை அந்நிறுவன இயக்குநர் குஃப்ரான் ஆலம் அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 200MP சென்சார், தனித்துவமான விவரங்களுடன் படங்களை எடுக்கும் வகையில் அடாப்டிவ் பிக்சல்களுடன் புதிய மாடல் ஃபோன் உள்ளதாக தெரிவித்தார். சாம்சங் Galaxy S23 Series-க்கான முன்பதிவு தொடங்கிய 24 …

சாம்சங் கேலக்சி எஸ்23 சீரிஸ் புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம்… Read More »

சோனி நிறுவனம் அறிமுக படுத்தும் புதிய PS5 டூயல்சென்ஸ் எட்ஜ் கண்ட்ரோலர்..! வாங்குவதற்கு தயாராகி கொள்ளுங்கள்

சோனி நிறுவனத்தின் PS5 டூயல்சென்ஸ் எட்ஜ் வயர்லெஸ் கண்ட்ரோலர் முன்பதிவு தற்போது இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. அல்ட்ரா கஸ்டமைசேஷன் வசதியுன் பிளேஸ்டேஷன் கேம்பேட்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதேபோல் இந்தியாவிலும் இதே தேதியில் இதன் அறிமுகம் நடைபெறுகிறது. இந்த நிலையில், புதிய கண்ட்ரோலருக்கான முன்பதிவு அமேசான் இந்தியா, e2z ஸ்டோர், கேம்ஸ்திஷாப் மற்றும் சோனி செண்டர் உள்ளிட்டவைகளில் நடைபெறுகிறது. புதிய PS5 டூயல்சென்ஸ் எட்ஜ் …

சோனி நிறுவனம் அறிமுக படுத்தும் புதிய PS5 டூயல்சென்ஸ் எட்ஜ் கண்ட்ரோலர்..! வாங்குவதற்கு தயாராகி கொள்ளுங்கள் Read More »

போட் நிறுவனம் அறிமுக படுத்திருக்கும் அட்டகாச இயர்பட்ஸ்..!

போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் 100 மாடல் அசத்தல் தோற்றம், ENx, BEAST, IWP, மற்றும் ASAP போன்ற அதிநவீ தொழில்நுட்ப வசதிகள், தலைசிறந்த சவுண்ட் மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. பெபில் வடிவம் கொண்ட போட் ஏர்டோப்ஸ் 100 அளவில் சிறியதாகவும், தலைசிறந்த டிசைன் மற்றும் கேஸ் கொண்டிருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் 100 …

போட் நிறுவனம் அறிமுக படுத்திருக்கும் அட்டகாச இயர்பட்ஸ்..! Read More »

ஐபோன் 13 தோற்றத்தில் உருவான புது ஸ்மார்ட்போன்: விலை இவ்வளவு தானா..?

லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய லி-டிவி ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ஐபோன் 13 போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் LCD 720×1560 பிக்சல் டிஸ்ப்ளே, ஐபோன் 13 மாடலில் உள்ளதை போன்றே அகலமான நாட்ச், ஆக்டா கோர் ஹூபென் டி610 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, ஐபோன் 13-இல் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் …

ஐபோன் 13 தோற்றத்தில் உருவான புது ஸ்மார்ட்போன்: விலை இவ்வளவு தானா..? Read More »

இந்தியாவில் 5ஜி அப்டேட் வழங்கிய ஆப்பிள் நிறுவனம்..!

ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 16.2 பீட்டா வெர்ஷனை உலகம் முழுக்க வெளியிட்டு வருகிறது. இந்திய ஐபோன் பயனர்களுக்கு இந்த அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்குகிறது. இந்தியாவில் 5ஜி சப்போர்ட் வெளியிடும் நிறுவனங்களில் ஆப்பிள் தற்போது இணைந்து இருக்கிறது. முன்னதாக சாம்சங், சியோமி, ரியல்மி, ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கின. ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தி வருவோர் புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்து 5ஜி சேவையை பயன்படுத்த முடியும். …

இந்தியாவில் 5ஜி அப்டேட் வழங்கிய ஆப்பிள் நிறுவனம்..! Read More »

தரமான அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம்..! விவரம் இதோ

இன்ஸ்டாகிராம் சேவையில் பதிவுகளை ஷெட்யுல் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்த வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை பயனர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களாகவே பதிவுகளை வெளியிடும் வசதி மட்டுமே இருந்தது. இதன் காரணமாக பலர் மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தி பதிவுகளை ஷெட்யுல் செய்து வந்தனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள புரோபஷனல் அக்கவுண்ட்ஸ்-களுக்கு மட்டும் பதிவுகளை ஷெட்யுல் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புது அம்சம் …

தரமான அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம்..! விவரம் இதோ Read More »

புதிதாக அறிமுகமான “ரியல்மி 10-னின்” அட்டகாச அம்சங்கள்..!

ரியல்மி நிறுவனம் முற்றிலும் புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.4 இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 16MP செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 …

புதிதாக அறிமுகமான “ரியல்மி 10-னின்” அட்டகாச அம்சங்கள்..! Read More »