Skygain News

world

அதிர்ந்த சிரியா – இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை

சிரியாவில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிண்டிரெஸ் நகரில் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி இடிபாடுகளுக்குள் பச்சிளம் குழந்தை ஒருவர் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட மீட்புக் குழுவினர் அவரை மிகுந்த கவனத்தோடு மீட்டனர். அக்குழந்தை நலமுடன் மீட்கப்பட்டதால் உற்சாகமடைந்த குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நாளில் துருக்கியில் 3 பெரிய நிலநடுக்கம்! 4000ஐ எட்டிய உயிரிழப்பு!

துருக்கி நாட்டில் நேற்று முதலில் காலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகியிருந்தது.இந்த நிலநடுக்கம் அதிகாலையில் ஏற்பட்டதால் உயிரிழப்பு அதிகமாக இருந்தது. அடுத்தடுத்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி மாலை 3.54 மணிக்கு ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6ஆகப் பதிவாகி இருந்தது.கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ரிக்டர் அளவுகோலில் 6ஆக மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. …

ஒரே நாளில் துருக்கியில் 3 பெரிய நிலநடுக்கம்! 4000ஐ எட்டிய உயிரிழப்பு! Read More »

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 400 ஐக் கடந்துள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. பேரிடர் காரணமாக, துருக்கியில் 7 நாள்கள் துக்கம் கடைபிடிக்கப்படுமென அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியா மக்களுக்கு ஜெர்மனி, ஈராக் உள்ளிட்ட நாடுகள் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறது. நிலநடுக்கத்தால் வீடுகள், வணிக வளாகங்கள் என ஏராளமான கட்டடங்கள் சரிந்து தரைமட்டமாகி குவியல் …

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… Read More »

10 திருமணம் செய்வது தான் என்னுடைய ஒரேய கனவு… 9தை தொடர்ந்து 10க்கு நுழையும் பிரேசில் மாயக்கண்ணன்..!

பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ நகரில் வசித்து வருபவர் ‘ஆர்தர் ஓ உர்சோ’. இவருக்கு ஏற்கனவே ஒன்பது மனைவிகள் உள்ளனர். லுவானா கஜகி என்பவரை முதலில் திருமணம் செய்திருக்கிறார். இதை அடுத்து மேலும் எட்டுப் பெண்களை தொடர்ந்து திருமணம் செய்துள்ளார். 10 பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரின் ஒரே லட்சியம் என்பதால் பத்தாவது திருமணம் செய்யப்போகிறேன் என்று சொல்லி வருகிறார். 9 மனைவிகள் இருந்தாலும் ஆர்தருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார். …

10 திருமணம் செய்வது தான் என்னுடைய ஒரேய கனவு… 9தை தொடர்ந்து 10க்கு நுழையும் பிரேசில் மாயக்கண்ணன்..! Read More »

சீனாவில் தொடரும் கொரோனா: கட்டுப்பாட்டினை கண்டு கொந்தளிக்கும் மக்கள்..!

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகினையே உலுக்கிய எடுத்த சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தன் சற்று குறைந்துள்ளது. இந்த வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசுக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. ஆனால், சீனா கடும் கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.சீனாவில் புதிதாக கடந்த 24 …

சீனாவில் தொடரும் கொரோனா: கட்டுப்பாட்டினை கண்டு கொந்தளிக்கும் மக்கள்..! Read More »

மீண்டும் புதிய என்ட்ரி கொடுக்கும் கொரோனா ..! ஒரே நாளில் பாதிப்பு 39,791 ஆஹா

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகினையே உலுக்கிய எடுத்த சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தன் சற்று குறைந்துள்ளது. இந்த வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசுக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. ஆனால், சீனா கடும் கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக …

மீண்டும் புதிய என்ட்ரி கொடுக்கும் கொரோனா ..! ஒரே நாளில் பாதிப்பு 39,791 ஆஹா Read More »

பல்வேறு நிறுவனத்தை தொடர்ந்து தற்போது மீட்டும் முக்கிய நிறுவனமான ஒன்று 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறதா..?

பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதன்படி பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இப்படி முக்கிய நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்கள் …

பல்வேறு நிறுவனத்தை தொடர்ந்து தற்போது மீட்டும் முக்கிய நிறுவனமான ஒன்று 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறதா..? Read More »

மிக எளிமையாக நடைபெற்ற அமெரிக்க அதிபரின் பேத்தி திருமணம்..!

உலகில் செல்வாக்கு மிகுந்த நாடாக கருதப்படும் அமெரிக்க நாட்டின் புதிய அதிபராக இருப்பவர் ஜோ பைடன் . ஜோ பைடனின் மூத்த மகனான ஹண்டர் பைடன் மற்றும் முன்னாள் மனைவி கேத்தலின் புலேவுக்கு பிறந்தவர் 28 வயதான நவோமி பைடன். இவர் வாஷிங்டனில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 28 வயதான நவோமி பைடன், 24 வயதான சட்டகல்லூரி மாணவன் பீட்டர் நில்லுவை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் குடும்பத்தினர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து திருணம் செய்து …

மிக எளிமையாக நடைபெற்ற அமெரிக்க அதிபரின் பேத்தி திருமணம்..! Read More »

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சுனாமி எச்சரிக்கையா…!

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. பெரும்பாலும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், சில நேரங்களில் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி செல்கிறது. இந்நிலையில், சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், …

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சுனாமி எச்சரிக்கையா…! Read More »

சீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழப்பு..!

வென்ஃபெங் மாவட்டத்தில் உள்ள அன்யாங் நகரில் கைசிண்டா டிரேடிங் கோ லிமிடெட் நிறுவனத்தில் உள்ள உயர் தொழில்நுட்ப மண்டலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு குழுக்கள் 63 வாகனங்களை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். நேற்று இரவு முற்றிலும் அணைக்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல …

சீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழப்பு..! Read More »