வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தின் 100ஆவது நாள் வெற்றிவிழாவை படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடினர். சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற விழாவில் படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், நடிகை இவானா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். லவ் டுடே படத்திற்கு பிறகு தமது வாழ்க்கை வேறுமாதிரி செல்வதாக நடிகை இவானா பேசினார். சிரமத்தை எதிர்கொண்டால் தான் வெற்றி எனும் மலையை ஏற முடியும் என நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்தார்.
