தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் நெல் முக்கிய விவசாயமாக உள்ளது. இந்த மாதம் நெல் அறுவடை செய்ய விவசாயிகள் காத்திருந்தனர்.
இந்நிலையில் தான் பருவம் தவறி சமீபத்தில் மழை பெய்தது. இதனால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.

பருவம் தவறிய மழையால் டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நெல் கொள்முதலில் கூடுதல் தளர்வு வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் தான் சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி சி யூனுஸ், பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுடப் அதிகாரிகள் பிரபாகரன், ஒய் போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழு நாளை முதல் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது