ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கே, சென்னையில் இருந்து 670 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்காகவும் மையம் கொண்டிருக்கிறது.

இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்றும் இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதாவது இன்று வட தமிழகம் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது .

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.