நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்று திசை மாறுபாட்டினால் இந்த நிலை என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற ஆறு மாவட்டங்களில் நேற்றைய தினமும் இடி மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.